9 வயது சிறுமியின் மூளையில் அறுவை சிகிச்சையின் போது பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் அறுவைசிகிச்சை குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், “இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது […]
