இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் செய்திகளின் எதிர்காலம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பில் 65 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய சக்தியின் கூட்டமைப்பு ஆகும். ஊடகங்கள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும். தாய்மொழி வளர்ச்சி தவிர பிற மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். தாய்மொழி என்பது கண் போன்றது. […]
