இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான அக்தர் அலி வயது முதிர்வால் இன்று காலமானார். இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரும், பிரபல பயிற்சியாளருமான அக்தர் அலி(83) இன்று காலமானார். அவர் 1950-1960- களில் இந்தியாவின் டேவிஸ் கோப்பை அணிகளில் உறுப்பினராக இருந்தவர். உலகக் கோப்பை போட்டியில் 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். உலகின் மிகப்புகழ் பெற்ற பயிற்சியாளராக ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ் மற்றும் சானியா மிர்சா ஆகியோருக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். […]
