மின்சாரம் தாக்கி அக்காள் தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தில் வசிப்பவர் விஜயராஜ். இவருக்குத் திருமணம் ஆகாததால் தனது அக்கா விஜயலட்சுமி வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.பொங்கல் பண்டிகைக்காக விஜயலட்சுமியின் தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கே விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். […]
