கீழடியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உறைகிணறு, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் கீழடியில் ஏழாம் கட்டட ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆராய்ச்சியில் பாசி மணிகள், பெண்கள் காதில் அணியும் ஆபரணங்கள், மற்றும் சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுடுமண்ணால் ஆன மூன்று அடுக்கு உறை கிணறும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட சதுரவடிவிலான வெள்ளி நாணயத்தில் இருபுறமும் சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. […]
