அகழாய்வு பணியில் 5 மனித எலும்புக்கூடு கிடைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் மூலம் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. தற்போது கீழடியில் 7 – ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் அகழாய்வு பணிகள் கீழடியில் மட்டுமின்றி அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள […]
