மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அகரப்பேட்டை மணல்மேடு தெருவில் துரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், பிரேம்குமார், ஹேமா என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் பிரேம்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவெறும்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை துரைக்கண்ணன் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக தற்போது மணப்பாறை டெப்போவில் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து […]
