தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்களை ஏப்ரல் 19ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் சா.சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 25 முதல் மே 2-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கு முன் […]
