அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்ததாவது: “கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவஞானி அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தா கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைவதற்கு 20 முதல் […]
