ஃபேன்சி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஃபேன்ஸி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊர் ஊராக ஃபேன்ஸி பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனும் விடிவெள்ளிநகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்ற தொழிலாளியும் உறவினர்கள். […]
