புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தமிழக கட்சியால், எங்களுடைய கடமையை அரசியல் கடமையை நிறைவேற்ற முடியாத ஒரு மோசமான நிலைமை இருக்கிறது. இதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் வெளியே தெரியாமல் ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் நடக்கக்கூடிய ஒடுக்கு முறைகள். எனவே இது போன்ற ஒடுக்குமுறைகள் புதிய தமிழகத்தை குறி வைத்து, புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தில் மீண்டும் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில்..
இது எல்லாம் மாநில காவல் துறையின் இயக்குனருக்கு தெரிந்து நடக்கிறதா, இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. எனவே அவருடைய கவனத்திற்கு இதுபோன்ற அடுக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விரிவான ஒரு மனுவை காவல்துறையினுடைய தலைமை இயக்குனர் அன்புக்குரிய சைலேந்திரபாபு ஐ,பி.எஸ் அவர்களிடத்திலேயே நாங்கள் அந்த மனுவை சமர்ப்பித்து இருக்கிறோம் என தெரிவித்தார்.