கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அரசு அலுவலங்களில் அனுமதி கிடையாது என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது .
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலுவலகத்திற்கு வருகை தரும் நபர்கள் 48 மணி நேரத்திற்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறையில் இருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்’, என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.