2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்க்காடு வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர் செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல , முயற்சி நின்றாலும் மரணம் தான் என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அதன் பின் செய்தியாகளை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தயாராக மாணவர்களுக்கு 240 நாட்கள் தேவைப்படுவதாகவும், ஆகையால் தமிழகத்தில் 70,00,000 மாணவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். பாடங்கள் youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,அதனை பதிவிறக்கம் செய்தும் மாணவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.