T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சான் மசூத் 38 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களும் எடுத்தனர். மேலும் சதாப்கான் 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 3 விக்கெட்டுகளும், அடில் ரசித் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஷாஹின் அப்ரிடி வீசிய முதல் ஓவரில் ஹேல்ஸ் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹாரிஸ் ரவூப் வீசிய தனது 4ஆவது ஓவரில் பிலிப் சால்ட் அவுட் ஆனார். இதையடுத்து ஜோஸ் பட்லரும், பென் ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் ஆடினர். அதன்பின் அதிரடியாக ஆடி வந்த நிலையில் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த போது ஹாரிஸ் ரவூப் வீசிய 6ஆவது ஓவரில் கீப்பர் ரிஸ்வானிடம் கொடுத்து அவுட்டானார்.
இதையடுத்து ஸ்டோக்ஸ் – ஹாரி புரூக் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக தட்டி தட்டி ஆடினர். தொடர்ந்து ஹாரி புரூக் ஷதாப் கான் வீசிய 13 வது ஓவரில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது 12.3 ஓவரில் இங்கிலாந்து அணி 84/4 என இருந்தது. அதேசமயம் கேட்ச் பிடித்த அப்ரிடிக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் வெளியேறினார். பின் மொயின் அலியும், ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்து இலக்கை விரட்டினர்.
பின் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவைப்பட்டது. அப்போது உள்ளே வந்த ஷாஹின் அப்ரிடி 16வது ஓவரின் முதல் பந்தை வீசினார். அந்த பந்து டாட் பால் ஆனது. ஆனால் அடுத்த பந்து அவரால் வீச முடியவில்லை. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் வெளியேறினார். இதனால் இப்திகார் அகமது அந்த ஓவரை வீச, ஸ்டோக்ஸ் 5 மற்றும் 6ஆவது பந்தில் பவுண்டரி, சிக்சர் என அடித்ததால் 13 ரன்கள் கிடைத்தது.
இதையடுத்து முகமது வசீம் வீசிய 17 வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட 16 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது முகமது வசீம் வீசிய 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் மொயின் அலி (19)அவுட் ஆனார். இதையடுத்து அதே ஓவரில் ஸ்டோக்ஸ் 4ஆவது பந்தில் பவுண்டரி அடித்து மேட்ச் டை செய்து, லாஸ்ட் பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிபெற வைத்தார்.
இங்கிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற நிலையில், தற்போது வென்று இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். லிவிங்ஸ்டன் ஒரு ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார்.
WHAT A WIN! 🎉
England are the new #T20WorldCup champions! 🤩#PAKvENG | #T20WorldCupFinal | 📝 https://t.co/HdpneOINqo pic.twitter.com/qK3WPai1Ck
— ICC (@ICC) November 13, 2022