Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : 82/6 என தடுமாறிய ஆப்கான்….. அதிரடி அரைசதம் அடித்து மீட்ட கேப்டன் நபி….. பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு.!!

டி20 உலகக்கோப்பை பயிற்சிபோட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி..

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் 12 பிரதான சுற்றில் குரூப் 1 பிரிவில் உள்ள நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றுக்கு முன் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை டி20 உலகக் கோப்பை 2022 பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்  மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. முன்னதாக பங்களாதேஷுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடினார், ஆனால் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தொடக்க பேட்டர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த நிலையில், இந்த போட்டியில் களமிறங்கினார்கள்.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்க ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் 9, ரஹ்மானுல்லா குர்பாஸ் 0 ரன்னில் அவுட் ஆகியதை தொடர்ந்து, இப்ராஹிம் சத்ரான் மற்றும் தர்வீஷ் ரசூலி ஜோடி சேர்ந்தனர். இதில் சத்ரான் பொறுப்புடன் ஆடிவந்த நிலையில் ரசூலி 3 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த நஜிபுல்லா ஜத்ரான் 6, இப்ராஹிம் சத்ரான் 35,  அஸ்மத்துல்லா உமர்சாய் 0 ரன்களில் அவுட் ஆகினர்.. இதனால் ஆப்கான் 13.3 ஓவரில் 82/6 என பரிதவித்து கொண்டிருந்தது.

பாகிஸ்தான் மிரட்டல் பந்துவீச்சில் 100 ரன்களை தாண்டுமா என்ற நிலையில், கேப்டன் முகமது நபி மற்றும் உஸ்மான் கனி இருவரும் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன்பின் விக்கெட் விழவில்லை.. கடைசி வரை ஆடிய நபி 37 பந்துகளில் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) 51*ரன்களும், உஸ்மான் கனி 20 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட  32* ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி மற்றும்  ஹாரிஸ் ரவூப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.. இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கி ஆடிவரும் நிலையில், மழையால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 2.2 ஓவரில் 19 ரன்கள் எடுத்துள்ளது. பாக்., துவக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 0* ரன்னிலும், பாபர் அசாம் 8* ரன்னிலும் இருக்கின்றனர். மழை விட்டபின் போட்டி நடைபெறும்..

Categories

Tech |