Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா …..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது .

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுக்கு 84 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 24 ரன்னும்,மஹெதி ஹசன் 27 ரன்னும் எடுத்தனர் .தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில்  ரபடா, நோர்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதன்பிறகு 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில் டி காக் 16 ரன்னும், ரீஜா ஹென்ரிக்ஸ் 4 ரன்னும் ,வான் டர் டஸ்சன் 22 ரன்னும் எடுத்து  ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா  31ரன்னுடன்  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |