Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மாஸ் காட்டிய வார்னர், மார்ஷ் ….! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது .

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த  38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் பொல்லார்ட் 44 ரன்கள் எடுத்தார் . ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

இதில் களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ஞ்  9 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்து டேவிட் வார்னர்- மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் .இதனால் ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 89 ரன்னும், மிட்செல் மார்ஷ் 53 ரன்னும் எடுத்தனர்.

Categories

Tech |