Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup:மாஸ் காட்டிய டேவிட் வார்னர் ….!இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா….!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது .

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் – கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இதில் டேவிட் வார்னர் 65 ரன்னும் ,ஆரோன் பிஞ்ச் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர் .இதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்னும், ஸ்டாய்னிஸ் 16 ரன்னும் எடுக்க , இறுதியாக ஆஸ்திரேலியா அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |