டி20 உலகக்கோப்பை தோடரில் இன்று துபாயில் நடைபெறும்ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன .இதற்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே எஞ்சியுள்ள போட்டிகளில் ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டும் .
எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா ,ராகுல் ,ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது .அதேபோல் பந்து வீச்சிலும் அஸ்வின், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் எதிர் அணிக்கு சவாலாக உள்ளனர் .இதையடுத்து நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த ஸ்காட்லாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது .இதனால் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச பட்டியல்:
இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீஃப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.