Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup ‘குரூப் 1’: ஆஸி ,இங்கிலாந்து அணிகள் …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் 12 அணிகள் ‘குரூப்-1’ , ‘குரூப்-2’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் .

அதன்படி ‘குரூப்-1’ பிரிவில் இடம்பிடித்த இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி பெற்று  8 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும் இருந்ததால் இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன .இதற்கு முன்பாக இலங்கை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

Categories

Tech |