டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது .
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது .அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 85 ரன்கள் குவித்தார்.இதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக கேப்டன் ஆரோன் பின்ஞ் -டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கினர்.இதில் ஆரோன் பின்ஞ் 5 ரன்னில் வெளியேற டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார் இவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 27 ரன்னும், மேக்ஸ்வெல் 28 ரன்னும் குவித்தனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.