டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது .
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசன் – மார்க்ரம் ஜோடி அரைசதம் கடந்து அசத்தினர் .இதில் வான் டெர் டுசன் 94 ரன்னும், மார்க்ரம் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது .
இதில் ஜாஸ் பட்லர் 26 ரன்னும் ,மொயீன் அலி 37 ரன்னும் ,பேரஸ்டோவ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.இதன் பிறகு களமிறங்கிய லிவிங்ஸ்டோன்- மார்கன் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதில் லிவிங்ஸ்டோன் 28 ரன்னில் ஆட்டமிழக்க மார்கன் 17 ரன்னில் வெளியேறினார் . இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.