Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இலங்கையை அலறவிட்ட மில்லர் ….! 4 விக்கெட் வித்தியாசத்தில்….தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி …..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றைய  ஆட்டத்தில் இலங்கை- தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி சார்பில்  தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.இதன் பிறகு 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.ஆனால் களமிறங்கிய முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதில்  நிதானமாக விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா 46 ரன்கள் குவித்தார் .இதன்பிறகு களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இதில் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்இருந்தது.அப்போது 4 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் இரண்டு சிக்சர் உட்பட 14 ரன்கள் அடித்து விளாசினார். அடுத்து 5-வது பந்தை எதிகொண்ட ரபாடா பவுண்டரிக்கு அடிக்க இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Categories

Tech |