டி 20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .
டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்வது.அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா,கே.ல்.ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .ரோஹித் சர்மா 74 ரன்னும்,கே.எல்ராகுல் 69 ரன்னும், ரிஷாப் பண்ட் 27 ரன்னும் ,ஹர்திக் பாண்ட்யா 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.இதன் பிறகு 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 88 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.