டி-20 உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது .
டி-20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா 33 ரன்னும் , முகமது ஷாஜத் 45 ரன்னும் எடுத்தனர் .
இதன்பிறகு 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியாஅணி களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நமீபியா அணி தடுமாறியது இதனால் 56 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இறுதியாக நமீபியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து படுதோல்வியடைந்தது . இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி ‘குரூப் 2’ பிரிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.