Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று 4 அணிகளுக்குள் கடும் போட்டி….. “இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா?”….. மழை வந்தால் என்ன நடக்கும்…. இதோ.!!

இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டியில் அரை இறுதிக்கு செல்ல 4 அணிகள் மல்லு கட்டுகின்றன..

ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். குரூப் 1 பிரிவில் உள்ள அணிகளுக்கு இடையான சூப்பர் 12 போட்டி நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது.

அதன்முடிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆனால் குரூப் 2 பிரிவில் தற்போது 4 அணிகளுக்கு இடையே பெரும் போட்டி நடைபெறுகிறது. அதாவது இன்றும் மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. இன்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில், எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்பது தெரிந்து விடும். அதில் முதலில் இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.. தொடர்ந்து அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்  அணிகள் மோதுகின்றன.. அதனை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் அரை இறுதிக்கு சென்று விடும். அதேபோல தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்தை வீழ்த்தினால் நிச்சயமாக அரை இறுதிக்கு சென்று விடும். இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினாலும், அந்த அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியாது. அதே போல வங்கதேசம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினாலும் அரையிறுதிக்கு செல்ல முடியாது..

ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும். அதேசமயம் தென்னாபிரிக்கா மற்றும்  நெதர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் ஒரு புள்ளி வழங்கும்போது, தென்னாப்பிரிக்காவும் 6 புள்ளியில் இருக்கும். பாகிஸ்தான அணி வங்கதேசத்தை வீழ்த்தும்போது அந்த அணியும் 6 புள்ளியில் இருக்கும் போது, ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லவும் மற்றொரு வாய்ப்பு உள்ளது.

 

அதேசமயம் தென்னாபிரிக்க அணி நெதர்லாந்தை வீழ்த்தினால் அரையிறுதிக்கு செல்லும். ஒருவேளை இந்தியா ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடையும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏனென்றால் அப்போது இரு அணிகளும் 6 புள்ளிகளில் இருந்தாலும் இந்தியாவை விட பாகிஸ்தான் ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது.

இருப்பினும் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் இந்தியா அரையிறுதிக்கு செல்வது உறுதி. ஏனென்றால் 6 புள்ளியில் இருக்கும் இந்திய அணிக்கு மழையால் நிற்கும் பட்சத்தில் ஒரு புள்ளி வழங்கும்போது 7 புள்ளியில் அந்த அணி அரை இறுதிக்கு செல்லும். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே போட்டி மழையால் கைவிடும் பட்சத்தில், தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்தை வீழ்த்தினால் புள்ளி பட்டியலில் ரன்ரேட்டின் படி முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

மேலும் வங்கதேச அணிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது, அதாவது தென்னாபிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் வீழ்ந்தால், வங்கதேச அணி ஒருவேளை பாகிஸ்தானை வீழ்த்தினால் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு செல்லும்.. அதாவது தென்னாப்பிரிக்காவும், பாகிஸ்தானும் எதிரணியிடம் தோற்கும் பட்சத்தில் இந்தியாவும், வங்கதேசமும்  அரையிறுதிக்கு செல்லும்..

இதில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் கண்டிப்பாக எதிரணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லும் என்றே கணிக்கப்படுகிறது. ஆனால் கத்து குட்டியான ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்பதே உண்மை.

எனவே  வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு செல்லும் . அதேசமயம் காலையில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தால் பாகிஸ்தான் செல்லும்.

அதே சமயம் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை வெல்லும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணி  நெதர்லாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி ஒருவேளை ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தால் பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே 6 புள்ளியில் இருக்கும். அப்படி இருக்கும்போது ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அல்லது பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். ரன்ரேட்டை பொறுத்தவரை பாகிஸ்தான் (+1.117) தற்போது இந்தியாவை (+0.730) விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணிக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றால் நம்ப முடியுமா? ஆம் ஒருவேளை ஜிம்பாப்வே அணி இந்தியாவை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தும் பட்சத்தில், தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைய வேண்டும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணியின் போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும் அப்படி நடந்து, ஜிம்பாவே இந்தியாவை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது மிக மிகக் குறைவு இதற்கு வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.. எனவே இன்று 5 அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் 4 அணிகளுக்கு தான் மிகக் கடுமையான போட்டி இருக்கிறது.

 

Categories

Tech |