Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup… இதுவே கடைசி… “3 லீடர் இருக்கிறார்கள்”… இந்தியாவுக்கு கோப்பை கிடைக்குமா?..

3 பேர் தலைவர்களாக இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்..

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகிறது.. நாளை மறுநாள் ஆஸ்திரேலிய அணியை பயிற்சி ஆட்டத்தில் சந்திக்கிறது. அதனை தொடர்ந்து  சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர்களில் ஆடியவர்கள்.. எனவே இந்திய அணி வீரர்களுக்கு அங்குள்ள மைதானத்தின் தன்மை தெரியும் என்பதில் சந்தேகமில்லை…

உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியின்  ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.. சம்பளமே வேண்டாம் என்று தோனி கூறியுள்ளார். அதே போல 2000 கால கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஆக இருந்த சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருக்கிறார்.. விராட் கோலி தற்போது டி20 உலக கோப்பை கேப்டனாக இருக்கிறார்..

சௌரவ் கங்குலி, எம்.எஸ் தோனி, விராட் கோலி மூவரும் வெவ்வேறு தலைவர்களாக இருந்து தங்கள் பணியினை செய்கின்றனர்.. மூவரும் இணைந்துள்ளது அணிக்கு கூடுதல் பலம்.. விராட் கோலிக்கு டி20 கேப்டனாக இதுவே  கடைசி தொடர்.. இதன் பின் அவர் டி20 கேப்டனாக செயல்படமாட்டார்.. எனவே கோப்பையை வெல்ல ஒரு பெரிய போராட்டமே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.. இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Categories

Tech |