டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன.
ஓமனில் உள்ள அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 9ஆவது போட்டியில் பங்களாதேஷ் – பப்புவா நியூ கினி அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஓமன் – ஸ்காட்லாந்து அணிகள் மோத இருக்கின்றன. ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் ஸ்காட்லாந்து விளையாடும் என்பதால் இந்த போட்டி அனல் பறக்கும்.