வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதியை விட்டு வெளியேறியது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி 9:30 மணிக்கு மோதியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாண்டோ 48 பந்தில் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்தார்.மேலும் அஃபிஃப் ஹொசைன் 24 ரன்களும், சௌமியா சர்க்கார் 20 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளும், ஹரிஸ் ரவூப் மற்றும் இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் களமிறங்கி விக்கெட் இழக்காமல் பொறுமையாக ஆடினர். முதல் 10 ஓவரில் பாகிஸ்தான அணி விக்கெட் இழக்காமல் 56 ரன்கள் குவித்தது. இதையடுத்து 11ஆவது ஓவரில் பாபர் அசாம் 25 ரன்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து 12ஆவது ஓவரில் முகமது ரிஸ்வான் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து நவாஸ் 4 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து வந்த முகமது ஹாரிஸ் மற்றும் சான் மசூத் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். அதன்பின் அதிரடியாக ஆடிய முகமது ஹாரிஸ் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் 17 வது ஓவரில் அவுட் ஆனார். அதன்பின் இப்திகார் அகமது உள்ளே வந்து 1 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சான் மசூத் 13 பந்துகளில் 22 ரன்களுடன் களத்தில்இருந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.
Against all odds, Pakistan have made it to the #T20WorldCup semi-finals 🎉 pic.twitter.com/VQjtNpbfYc
— ICC (@ICC) November 6, 2022