டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 42 ரன்னும்,ரோஸ்டன் சேஸ் 39 ரன்னும் குவித்தனர். வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான், சொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர் .இதன்பிறகு 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது .இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேற , முகமது நைம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார் இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .
இதன்பிறகு லிட்டன் தாஸ் – மஹ்முதுல்லா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இதில் லிட்டன் தாஸ் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னில் ஆட்டமிழந்தார் . இறுதியாக வங்காளதேச அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது .இதனால் போட்டியின் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது .இதில் கடைசி ஓவரை வீசிய ஆந்த்ரே ரஸ்செல் 9 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார் .இறுதியாக 20 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது .இதில் தோல்வியடைந்த வங்காளதேச அணி டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டது.