Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழையால்….. இந்தியா – நியூசிலாந்து பயிற்சி போட்டி ரத்து..!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கப்பா மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா – நியூசிலாந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் 12 பிரதான சுற்றில் குரூப் 1 பிரிவில் உள்ள நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றுக்கு முன் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.

இதற்கிடையே அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. அதேபோல குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணியும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றது.. ஏற்கனவே மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த 2 பயிற்சி போட்டியில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதேபோல  முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இடையே இன்று பயிற்சி போட்டி நடைபெறுவதாக இருந்தது. இப்போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கப்பா மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Categories

Tech |