Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : எல்லோரும் வாங்க.! ஒரு க்ளிக்…. குரூப் செல்பி எடுத்த ஆரோன் பிஞ்ச்…. வைரலாகும் போட்டோஸ்..!!

இந்தியா உட்பட அனைத்து அணி கேப்டன்களும் ஒட்டுமொத்தமாக அமர்ந்திருந்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது..

8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.. அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குள் விளையாட தயாராக இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக 45 போட்டிகள் நடைபெறுகிறது.

நாளை முதல் சுற்று போட்டியில்  இலங்கை மற்றும் நமீபியா அணிகள் இந்திய நிரப்படி காலை 9.30 மணி அளவில் மோதுகின்றன. அதேபோல மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் பிற்பகல் 1:30  மணி அளவில் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இந்த டி20 உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இணைந்து செய்து வருகின்றன. இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக ஐசிசியின் சார்பில் 16 நாடுகளின் கேப்டன்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளுடைய கேப்டன்களும் கலந்து கொண்டனர். உலக கோப்பையின் பயிற்சிகள் மேற்கொண்டது மற்றும் அணியை பற்றி ஒவ்வொரு கேப்டன்களும் செய்தியாளரிடம் பேசினார்கள்..

மேலும் அனைத்து அணி கேப்டன்களும் ஒட்டுமொத்தமாக அமர்ந்திருந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோவை ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.. இந்த போட்டோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.. அதேபோல ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்ற கேப்டன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. சூப்பர் 12 முதல் போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அக்., 22 அன்று மோதுகின்றன.

அதேபோல பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் இன்று தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் கேக் வெட்டும் போது அனைத்து அணிகளின் கேப்டன்களும் சுற்றி நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனால் அவர் நெகிழ்ந்து போனார்..

Categories

Tech |