நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான இன்றைய பயிற்சி போட்டியில் மோதுகின்றன..
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் 12 பிரதான சுற்றில் குரூப் 1 பிரிவில் உள்ள நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றுக்கு முன் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.
இதற்கிடையே அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. அதேபோல குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணியும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றது.. ஏற்கனவே மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த 2 பயிற்சி போட்டியில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அதாவது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கே.எல்.ராகுல் (57), சூர்யகுமார் யாதவ் (50) ஆகியோரின் அரைசதங்களால் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. பின்னர், ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய அணிக்காக 76 ரன்கள் எடுத்தார், மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஆஸ்திரேலியா 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான இன்றைய பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறுகிறது. 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், நியூசிலாந்துக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாகவும் உள்ளனர். அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து தோல்வியடைந்தது.
முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, மார்ட்டின் கப்டில் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் மற்றும் தப்ரைஸ் ஷம்சி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்தை அடக்கினர்.
இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிலீ ரோசோவ் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். எய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 27 ரன்களில் இஷ் சோதியிடம் தனது விக்கெட்டை இழந்தார். கிவி பந்துவீச்சாளர் இஷ் சோதி மட்டும் ஒரு விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..