Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல் பறக்கும் போட்டி…. இந்தியா vs தென்னாப்பிரிக்கா இன்று மோதல்.!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று  சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன..

8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும்.

இந்த தொடரில் இந்தியா தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. முதல்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி 4 பள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு போட்டி மழையால் ரத்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு வெற்றி என 3 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது.. அதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த்  மைதானத்தில் மோதுகின்றன. முன்னதாக பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. மேலும் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 12:30 மணிக்கு பெர்த் மைதானத்தில் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பாண்டியா உள்ளிட்ட பேட்டர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். அதேபோல பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, அஸ்வின் அக்சர் படேல் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் டெத் ஓவரில் ரன்களை கசிய விட்டார். அதனை அவர் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல இந்திய அணியின் தொடக்க வீரரான கே எல் ராகுல் கடந்த பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்கிறார். எனவே இந்த போட்டியில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேசமயம் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை ஆட வைக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். யார் இறங்குவார்கள் என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பு தான் பார்க்க முடியும்.

அதேபோல தென்னாபிரிக்கா அணியில் வங்கதேச அணிக்கு எதிராக ரூஸோவ் அதிரடி சதம் (109) அடித்து நல்ல பார்மில் உள்ளார். மேலும் தொடக்க வீரர் குயிண்டன் டிக்காக், ரீலி ரூசோவ்,மார்க்கம் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். அவருடன் சேர்ந்து மில்லரும் ஜொலித்தால் அணி கூடுதல் வலுப்பெறும். பந்துவீச்சை பொறுத்தவரை ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, கேசவ் மகாராஜ் ஆகியோ நல்ல பார்மில் இருக்கின்றனர். அதே சமயம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா 2 போட்டியிலும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றுகிறார். எனவே அவர் தொடக்க வீராக இறங்காமல் 3ஆவது வரிசையில் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததால் இன்றைய போட்டி அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை..

கணிக்கப்பட்ட இந்திய அணி  லெவன் :

ரோஹித் ஷர்மா (கே), கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர்.அஷ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.

கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி லெவன் :

டெம்பர் பவுமா (கே) குயிண்டன் டிகாக், ரீலி ரூசோவ், மார்க்கம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், பார்னெல், கேசவ் மஹாராஜ், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஷம்சி

 

Categories

Tech |