Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup : பாகிஸ்தானுக்கு எதிராக ‘கிங்’ கோலியின் மாஸ் ரெக்கார்ட் ….! என்னனு தெரியுமா …..?

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான்  அணிக்கெதிரான விராட் கோலி வைத்திருக்கும் விசித்திரமான சாதனை தற்போது வைரலாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை பாகிஸ்தான் அணியிடம் தோற்காத இந்திய அணி இந்த முறையும் தங்கள் ஆதிக்கத்தை தொடர விரும்பும் .அதேபோல் இந்தியாவிடம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து  வரும் பாகிஸ்தான் அணி இதனை முறியடிக்கும் வகையில் இந்தியாவை வீழ்த்தும்  முனைப்புடன் களமிறங்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி படைத்துள்ள ஒரு விசித்திரமான சாதனை தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியுள்ள விராட் கோலி ஒருமுறை கூட அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அவரை வீழ்த்தியது இல்லை. இதுவரை டி20 உலக கோப்பை போட்டிகளில்  3 முறை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி இருக்கும் விராட் கோலி  78*, 36*, 55* என ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட் பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |