டி20 உலகக்கோப்பை தொடரின் ‘சூப்பர் 12’ சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபகாலமாக டி-20 போட்டியில் பெரிதளவில் சோபிக்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக அணியில் டேவிட் வார்னே தொடர்ந்து சொதப்பி வருவதால் மணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இருந்தாலும் மற்ற வீரர்களான மார்ஷ், ஸ்மித், மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால் அணிக்கு சற்று கூடுதல் பலமாக உள்ளது .அதேபோல் பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால் எதிரணிக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .அதேபோல் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க அணியும் சம பலத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக டி காக், வெண்டர் டுசென், மில்லர் ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால் அணிக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தேச பட்டியல் :
ஆஸ்திரேலியா அணி – ஆரோன் பிஞ்ச் (கே), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஜோஷ் இங்லிஸ், ஆஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்.
தென் ஆப்பிரிக்கா அணி – டெம்பா பாவுமா (கே), குயின்டன் டி காக் , ஐடன் மார்க்ராம், ராசி வான்டெர் டிசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், டுவைன் பிரிட்டோரியஸ், ஆன்ரிச் நோர்ட்ஜே, கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா.