டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்க்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் பங்குபெற்ற வீரர்களே தற்போது டி20 உலக கோப்பை போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். இதனையடுத்து பந்து வீச்சில் ஜடேஜா, ரவி பிஷ்னோய், ஆவேஸ் கான் ஆகியோர் நீக்கப்பட்டு பும்ரா, ஹர்சேல் படேல், அக்சர் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறாதது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தீபக் ஹூடாவுக்கு பதில் ஷ்ரேயஸ் ஐயரையும், ஹர்சேல் படேலுக்கு பதில் முகமது சமியையும் சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.