காயம் காரணமாக வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் .
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ‘குரூப் 1 ‘பிரிவில் வங்காளதேசம் அணி இடம்பிடித்துள்ளது. அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .இதனிடையே தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் வங்காளதேசம் அணி மோத உள்ளது.
இந்த நிலையில் வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார் .சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.