டி20 கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இயக்குனர் ஒருவர் தனது ரசிகர் கிட்ட பந்தயம் கட்டி 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரசிய நிகழ்வு.
மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் கதாநாயகியாக அறிமுகமான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஓமர் லுலு. இவர் தற்போது “நல்ல சமயம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் பேசுவது வழக்கம். அப்போது ரசிகர் ஒருவர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெல்லுமா? இங்கிலாந்து வெல்லுமா? என்று இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்ட முடியுமா என்று ஓமர் லுலுவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்த பந்தயத்தில் ரசிகர் இங்கிலாந்து ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டியுள்ளார். இயக்குனர் ஓமர் லுலு பாகிஸ்தான் ஜெயிக்கும் என்று கூறினார். இந்த போட்டியின் பந்தய தொகையாக 5 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்துள்ளார்கள். மேலும் இந்த போட்டியில் இங்கிலாந்து ஜெயித்து விட சொன்னபடி அந்த இளைஞரை தனது இடத்திற்கே அழைத்தார் ஓமர் லுலு. பின்னர் அந்த இளைஞரை சோசியல் மீடியாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்தப் போட்டியில் சொன்னபடி 5 லட்சம் ரூபாயை நான் இவருக்கு தந்து விட்டேனா இல்லையா அவர் வாங்கிக் கொண்டாரா இல்லையா என்பது எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும். இந்த ரகசியத்தை நாங்கள் சாகும் வரை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூற அதற்கு அந்த ரசிகரும் புன்னகையுடன் தலையசைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.