டி 20 உலக கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன .
7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது.இதில் லீக் போட்டி முடிவில் ‘ஏ ‘பிரிவில் இலங்கை .நமீபியா மற்றும் ‘பி ‘பிரிவில் ஸ்காட்லாந்து , வங்காளதேசம் ஆகிய அணிகள் முதல் 2 இடங்களைப் பிடித்து ‘சூப்பர் 12’சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இதனிடையே அயர்லாந்து ,நெதர்லாந்து ,பப்புவா நியூ நியூகினியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இன்று முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .
இதில் ‘குரூப்-1 ‘பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ,தென்னாபிரிக்கா இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளும் ,’குரூப் 2 ‘பிரிவில் இந்தியா ,பாகிஸ்தான் நியூசிலாந்து , ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ,பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இறுதியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதியது. இதன் பிறகு 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .அதோடு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ,பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இல்லை.
இதனால் நாளைய போட்டியிலும் இந்திய அணி இந்த வரலாற்றை நீடிக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது .இதில் அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், இந்திய அணியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளது .எனவே நாளைய போட்டியில் உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .இந்திய நேரப்படி இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.