டி20 உலகக்கோப்பை போட்டியில் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது .
ஐபிஎல் 2021 இரண்டாவது பாதி ஆட்டம் நாளை முதல் தொடங்கி அக்டோபர் 15-.ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது . இந்த போட்டி அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது .இதில் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன .
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன .இதில் அக்டோபர் 18-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகவும், அக்டோபர் 20-ஆம் தேதி ஆஸ்திரேலியா எதிராகவும் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.