டி20 உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளன.
டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணியில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். இதனிடையே டி20 உலக கோப்பை போட்டிக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் 3 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் இடம்பெற்றிருந்த பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா, துணை விக்கெட் கீப்பர் அசம்கான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்சைன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் .இதையடுத்து ஹைதர் அலி, சர்பராஸ் அகமது மற்றும் பஹர் ஜமான்ஆகியோர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .தற்போது பாகிஸ்தானின் நடந்து வரும் தேசிய டி20 போட்டித் தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையாக கொண்டு டி20 உலகக்கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.