Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 உலகக் கோப்பை : அப்ரிடியின் சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசஅணியின்  ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாப் 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘சுற்றில் மோத உள்ள நிலையில் தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு முறை வெற்றி பெற்ற வங்காளதேச அணி சூப்பர் 12 சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது .இதனிடையே வங்காளதேசம் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதுவரை 28 டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடியுள்ள அவர் 39 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார் .அதோடு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான  ஷாகித் அப்ரிடி 34 போட்டிகளில் 39 விக்கெட் கைப்பற்றியதே டி20 உலக கோப்பை தொடரில் முக்கிய சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை ஷாகிப் அல் ஹசன் முறியடித்துள்ளார்.

Categories

Tech |