Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : பொல்லார்ட் தலைமையில் …. வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்  டி20 உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியை  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான  சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெறவில்லை .இதில் முன்னணி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார் .

இவர் கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் .இதையடுத்து ஆல்ரவுண்டரான ரோஸ்டன் சேஸ் டி20 போட்டியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாற்று வீரர்களாக ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், ஷெல்டன் காட்ரெல், டேரன் பிராவோஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி :

பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், பாபியன் ஆலன், வெய்ன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆந்த்ரே பிளட்செர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மயர், இவின் லீவிஸ், ஒபெட் மெக்காய், ரவி ராம்பால், ஆந்த்ரே ரஸ்செல், சிம்மன்ஸ், ஒஷானே தாமஸ், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

Categories

Tech |