Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :இறுதிப்போட்டியில் தமிழ்நாடு VS கர்நாடகா மோதல் …!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு ,கர்நாடகா ,ஹைதராபாத் மற்றும் விதர்பா ஆகிய அணிகள் தகுதி பெற்றன இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 90 ரன்னில் சுருண்டது தமிழக அணி தரப்பில் சரவணன் 5 விக்கெட் கைப்பற்றினார் .முருகன் அஸ்வின், முகமத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர் .

இதன்பிறகு 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி விளையாடியது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 34 ரன்னும், விஜய்சங்கர் 43 ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர் .இதன் மூலம்  தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து விதர்பா – கர்நாடகா அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Categories

Tech |