சுவிட்சர்லாந்து அரசு, இந்த மாதத்தின் கடைசியில் இயல்பு நிலைக்கு திரும்பப்போவதாக தெரிவித்திருக்கிறது.
சுவிற்சர்லாந்தில் ஊடகத்தை சேர்ந்தவர்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் மேஜையை சுற்றி எவ்வளவு பேர் அமரலாம் என்ற விதிகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டாயமாக வீடுகளிலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது விரும்புபவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. பள்ளிகளிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேரடி கல்வி தொடங்கப்படவுள்ளது.
விளையாட்டு மைதானங்களில் 15 நபர் வரை மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது 30 நபர்கள் வரை குழுவாக இணைந்து விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது இரவு விடுதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த அனைத்து விதிகளும் வரும் மே மாதம் 31 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.