சுவிட்சர்லாந்துக்கு வருகை புரியும் பயணிகள் பின்பற்ற வேண்டிய புதியக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்துக்கு வருகை தருபவர்கள் தங்களிடம் கொரோனா பாஸ் இல்லாத நிலையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும் நான்கு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக இரண்டாவது கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு 200 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். அந்த பரிசோதனையின் தரவுகளை தொடர்புடைய மாகாணத்தின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிலும் சுற்றுலா வரும் அனைத்து பயணிகளும் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு முன்பாக எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க உதவும் படிவம் ஒன்றை நிரப்பி கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் எல்லை பகுதியில் வசிப்பவர்களுக்கு பொருந்தாது. அதனால் எல்லை தாண்டி வரும் பணியாளர்களும் சுற்றுலா வருபவர்களும் கூடுதல் ஆவணங்களை நிரப்ப வேண்டிய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமல்ப்படுத்தப்படுகின்றன.