சுவிட்சர்லாந்திது மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) திங்கட்கிழமை அன்று புள்ளி விவரம் ஒன்று வெளியிட்டது. அதில் கூறியதாவது, கோவிட்-19 தொற்றால் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே வருடத்தில் சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தவர்களில், ‘ஆண்களுக்கு 9 மாதங்கள் குறைந்து 81.0 வருடங்கள்’ மற்றும் ‘பெண்களுக்கு 5 மாதங்கள் குறைந்து 85.1 வருடங்கள்’ என மக்களின் ஆயுட்காலம் சரிந்துள்ளது.
இதுபோன்ற சரிவுகள், ஆண்களுக்கு 1944-லும், பெண்களுக்கு 1962-லும் கடைசியாக ஏற்பட்டது என்றும் FSO குறிப்பிட்டது. அதிலும், வயது முதிர்ந்தவர்களின் ஆயுட்காலம் கடுமையாக குறைந்துள்ளது.
அதன்படி 2019 இல் 65 வயது நிறைந்த முதியோர்களில், ‘ஆண்கள் கூடுதலாக 20 வருடங்கள்’ மற்றும் ‘பெண்கள் கூடுதலாக 22.7 வருடங்களும்’ வாழலாம் என்று FSO கணித்துள்ளது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு, 65 வயது நிறைந்த முதியவர்களில், ‘ஆண்களுக்கு 7 மாதங்கள் குறைந்து 19.3 வருடங்கள்’ மற்றும் ‘பெண்களுக்கு 5 மாதங்கள் குறைந்து 22.2 வருடங்கள்’ வரை கூடுதலாக வாழலாம் என்று எதிர்பார்க்கலாம். இதுபோன்ற அதிக அளவிலான சரிவு, ஆண்கள் மத்தியில் ஒருபோதும் காணப்படவில்லை என்றும் FSO கூறியுள்ளது.