Categories
உலக செய்திகள்

கொரோனாவில் மீண்டவர்களுக்கான சான்றிதழ்.. சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் நாளையிலிருந்து கொரோனாவிற்கான சான்றிதழ் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும் இச்சான்றிதழ் வெளியிடப்படும். இதனை நகலெடுத்து உபயோகிக்கும் படியும், மொபைல் செயலியில் வைத்திருக்கும்படியும் செயல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் பெர்ன் மாநிலத்தில் முதலாவதாக, வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட இடங்கள் போன்றவற்றில் இச்சான்றிதழை மக்கள் பெறலாம். அதாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் அல்லது பரிசோதனை செய்து கொண்டவர்கள் போன்றவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதில் குறிப்பிட்ட நபரின் பெயர் உட்பட தேவையான தகவல்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். சான்றிதழ் கட்டாயம் இல்லை. எனினும் கொரனோ பாதிப்பிலிருந்து மீண்டு வந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பிற நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது இந்த சான்றிதழ் தேவைப்படும். அதாவது கொரோனா தொற்று இல்லாத நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, இந்த சான்றிதழ் அந்நாட்டின் விதிமுறைகளிலிருந்து விலக்களிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |