Categories
உலக செய்திகள்

34 வருடங்களில் இல்லாத கனமழை.. நீரில் மிதக்கும் சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதிகள்..!!

சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்ததில், முக்கிய நகரங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் சதுர மீட்டருக்கு 100 லிட்டர் மழை பொழிந்துள்ளது. மேலும் Faido பகுதியில் 180 லிட்டர்கள் பதிவாகியுள்ளது. எனினும் கடந்த 1987ஆம் வருடத்திற்கு பின்பு பெய்த இரண்டாவது பெரிய மழை இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1987  ம் வருடம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்து சதுர மீட்டருக்கு 365 லிட்டர்கள் பதிவானது.

இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டது. காலை நேரத்தில் மழை குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. சூரிச் பகுதிகளில் புயல் ஏற்பட்டிருப்பதால் தீயணைப்பு வீரர்களும் மீட்புக்குழுவினர்களும் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 100க்கும் மேற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றது. மேலும் இந்த கனமழையால் துர்காவ்  மண்டலத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |